தமிழரசுக் கட்சிக்கு எதிரான நகர்வுகளின் பின்னணியில் சுமந்திரன்! அம்பலமான உண்மைகள்
தமிழரசுக் கட்சி உள்விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் இருந்து தான் பின்வாங்குவதாக சுமந்திரன்(M.A.Sumanthiran) குறிப்பிட்டார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்(S.Sivamohan) தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றது.
இதன்போது, கூட்டத்திற்குள் இருந்து முரண்பட்டு வெளிநடப்பு செய்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வழக்குகளின் பின்னணியில் சுமந்திரன்
மேலும், சுமந்திரன் தான் வழக்குகளில் இருந்து பின்வாங்குவதாக தெரிவித்துள்ளதாகவும், இதிலிருந்தே குறித்த வழக்குகளின் பின்னணியில் அவர் தான் இருப்பதை சுமந்திரன் ஏற்றுக்கொள்கின்றார் என்றும் சிவமோகன் இதன்போது தெரிவித்துள்ளார்.
அவ்வாறு சுமந்திரன் தனது வழக்குகளில் இருந்து பின்வாங்கினால் தானும் தனது வழக்குகளில் இருந்து பின்வாங்குவதாக சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.