நாட்டில் இடம்பெற்று வரும் கப்பம் கோரல்கள் தொடர்பில் பொலிஸாரின் விசேட அறிவிப்பு
நாட்டில் இடம்பெற்று வரும் கப்பம் கோரல்கள் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் வர்த்தகர்களிடம், பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் பணம் கோரி செய்யும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கப்பம் கோரி அச்சுறுத்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களில் வர்த்தகர்கள் மற்றும் தனிப்பட்ட நபர்களிடம் கப்பம் கோரி மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் பெயர்களைப் பயன்படுத்தி கப்பம் கோரப்படுவதாக சில வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கப்பம் கொடுக்க வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |