இத்தாலிக்கான இறக்குமதி வரி தொடர்பில் ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானம்
இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாஸ்தா தயாரிப்புகள் மீது விதிக்கப்படவிருந்த மிகக் கடுமையான இறக்குமதி வரியை அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் அதிரடியாகக் குறைத்துள்ளது.
முன்னதாக, இத்தாலியின் 13 முக்கிய பாஸ்தா தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு அமெரிக்காவில் விற்பனை செய்வதாகக் குற்றம் சாட்டி அவற்றின் மீது சுமார் 92% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நிர்வாகத்தால் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள 15% வரியுடன் சேர்ந்து, பாஸ்தாவின் உண்மையான விலையை விட வரி அதிகமாகும் சூழலை உருவாக்கியது.
வரி விகிதம்
இதனால் அமெரிக்காவில் பாஸ்தாவின் விலை இருமடங்காக உயரும் என அஞ்சப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள புதிய தகவலின்படி, இத்தாலிய நிறுவனங்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைத்ததைத் தொடர்ந்து இந்த வரி விகிதம் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 'லா மொலிசானா' (La Molisana) நிறுவனத்திற்கான வரி 2.26 சதவீதமாகவும், 'கரோஃபாலோ' (Garofalo) நிறுவனத்திற்கு 13.98 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற 11 நிறுவனங்களுக்கு சுமார் 9.1% வரி விதிக்கப்பட உள்ளது.
வரிக் குறைப்புகள்
இந்த வரிக்குறைப்பு அமெரிக்காவில் பாஸ்தா விலையேற்றத்தைத் தடுப்பதுடன், இத்தாலியப் பிரதமர் ஜோர்ஜியா மெலோனிக்கும் ஒரு அரசியல் நிம்மதியை அளித்துள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் சமீபகாலமாகத் தனது கடுமையான வரிக் கொள்கைகளைச் சற்று மென்மையாக்கி வருவதன் ஒரு பகுதியாகவே இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.

முன்னதாக, கோப்பி, வாழைப்பழம் மற்றும் மாட்டிறைச்சி போன்ற முக்கிய உணவுப் பொருட்களுக்கும் இதேபோன்ற வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த வரிக் குறைப்புகள் தற்காலிகமானவை என்றும், மார்ச் 12ஆம் திகதி இது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam