இன்றும் உயர்ந்தது அமெரிக்க டொலரின் பெறுமதி
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(02.11.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (02.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 333.43 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.44 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 242.43 ரூபாவாகவும், கொள்வனவு விலை 231.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 355.04 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 340.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 407.81 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 392.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
படையப்பா ரீ ரிலீஸ்: விஜய் கில்லி படம் செய்த சாதனையை முறியடிக்குமா.. முன்பதிவு வசூல் விவரம் Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri