நாட்டில் நிலவும் கடுமையான வெப்பத்தால் வாகனங்கள் வெடிக்குமா! லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் விளக்கம்
நாட்டில் கடுமையான வெப்பமான வானிலை நிலவுகின்றமையால், வாகனங்களில் உள்ள எரிபொருள் தாங்கிகளில் வெடிப்புகள் ஏற்படுவதாக சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்தி
அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக வாகனங்களில் அதிகபட்ச கொள்ளளவிற்கு எரிபொருள் தொட்டிகளை நிரப்ப வேண்டாம் என்றும், இதன் காரணமாக வெடிப்பு ஏற்படலாம் என்றும் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புரம்பான வதந்திகள் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் உண்மையில்லை என்றும், மக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று லங்கா ஐ.ஓ.சி நிறுவனதெரிவித்துள்ளது.



