பிரித்தானியாவில் தரையில் விழுந்த உலங்குவானூர்தி.. மூவர் பலி
பிரித்தானியாவில் விமான பயிற்சியின் போது 4 பேர் பயணித்த உலங்குவானூர்தி விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐல் ஆஃப் வைட் தீவில் நடந்த விமான பயிற்சியின் போது ஷாங்க்ளின் அருகே உலங்குவானூர்தி ஒன்று வயல் பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பயிற்றுவிப்பாளர் உட்பட 4 பேர் விமானத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவரின் நிலை கவலைக்கிடம்
அதேவேளை, அண்மைய தகவலின் படி, உலங்குவானூர்தி விபத்தில் 3 பேர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒருவர் சிகிச்சைக்காக சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஹாம்ப்ஷயர் மற்றும் ஐல் ஆஃப் வைட் பகுதியை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் விபத்தின் காரணமாக A3020 ஷாங்க்ளின் சாலையை மூடியுள்ளனர்.
மேலும், விபத்தில் சிக்கிய 4 பேர் சாண்டவுன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதை உலங்குவானூர்தியை இயக்கிய நார்தும்பிரியா உலங்குவானூர்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



