சீனாவை நெருங்கும் பெரும் ஆபத்து.. 6 இலட்சம் பேரை இடமாற்ற உத்தேசம்
வியட்நாம் மற்றும் சீனாவின் ஹைனன் தீவிற்கு அருகே கஜிகி புயல் மிக வேகமாக நெருங்கி வருவதால், இரு நாடுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், கஜிகி புயலின் வீரியம் தீவிரமடைந்து வரும் நிலையில், வியட்நாமில் 6 இலட்சம் மக்களை இடமாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான தகவலின் படி, வியட்நாமில் 5,86,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பல விமானங்கள் இரத்து
Thanh Hoa, Quang Tri, Hue மற்றும் Danang ஆகிய மத்திய மாகாணங்களில் புயல் தாக்கம் அதிகமாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நேற்று, பகலிற்கு பிறகு மக்கள் வெளியே செல்லவேண்டாம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
கடலோர மாகாணங்களில் படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Vietnam Airlines 22 விமானங்களை இரத்து செய்துள்ளது. VietJet நிறுவனமும் விமானங்களை இரத்து மற்றும் தாமதம் செய்துள்ளது.
பொதுசேவைகள் முடக்கம்
சீனாவின் கடற்கரை சுற்றுலா நகரமான சான்யாவில் அனைத்து வணிக நிறுவனங்கள், பாடசாலைகள், கட்டுமான பணிகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
320 மி.மீ. வரை கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் வேகம் மணிக்கு 180 கி.மீ. அதிகரிக்கும் என சீன வானிலை மையம் தெரிவித்துள்ளது. சான்யா நகரம், மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையான சிவப்பு புயல் எச்சரிக்கையை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



