2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மின் கட்டணத்தை அதிகரிக்க இந்த வாரம் அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், 2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அது மிகவும் அநியாயமானது எனவும் அதனை மக்கள் செலுத்த வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்கட்டணம் அதிகரிப்பு
இதனையும் மீறி மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் மின்தடை செய்ய வரமாட்டார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை, 2023 ஜனவரி மற்றும் மே மாதங்களில் இரண்டு தடவைகள் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எவ்வாறாயினும் உத்தேச மின் கட்டண அறிவிப்பிற்கு தொழிற்சங்கங்கள், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், வர்த்தக சமூகம் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகள் போன்ற பல தரப்பினரின் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
