விரைவில் மீண்டும் எரிபொருளின் விலை உயரும்: பெட்ரோலியக் கூட்டுத்தாபத்தின் தலைவர் தகவல்
விரைவில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க நேரிடும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பாரிய நஷ்டத்தை சந்தித்து வருவதால், எரிபொருட்களின் விலைகளை கட்டாயம் அதிகரிக்க வேண்டு் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க கூறியுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளதாகவும் இந்த நஷ்டத்தை ஈடு செய்ய விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் இதற்காக அமைச்சரின் அனுமதியை கோரியுள்ளதாகவும் விஜேயசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கையில் எரிபொருள் விலையேற்றத்தினால் நாட்டில் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மீண்டும் எரிபொருள் விலையேற்றம் அதிகரிக்கப்படுமாயின் பொது மக்கள் கடுமையான நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என்று எதிர்கட்சியினர் கடுமையாக சாடியுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
