இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்! விலை திருத்தம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இதுவரை எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று(15) கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலை திருத்தம்
இதுவரை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் எவ்வித யோசனையும் முன்வைக்கவில்லை.

எனவே எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம்.
இதற்கு முன்னர் முற்பதிவு செய்யப்பட்ட எரிபொருட்களே தற்போது நாட்டை வந்தடைகின்றன. எரிபொருள் விநியோக நிறுவனங்கள் தற்போதுள்ள விலையில் எரிபொருட்களை விநியோகிப்பதில் நெருக்கடிகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளன.
உலக சந்தை நிலவரம்
கடந்த 3 மாதங்களாக எரிபொருள் விலையில் அரசாங்கம், நுகர்வோருக்கு சலுகைகளை வழங்கியிருக்கின்றது. இதற்காக 57 பில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டது.
எதிர்வரும் நாட்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டே, உள்நாட்டில் விலைகளைத் தீர்மானிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.