எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் மூன்று தனியார் எரிபொருள் நிறுவனங்களும் தற்போது போதுமான எரிபொருளை விநியோகித்து வருவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போதுமான எரிபொருள் விநியோகத்தை கோரி நடத்தப்பட்ட போராட்டத்தை தொடர்ந்து, தனியார் எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருளை விநியோகம்
அதன்படி, அனைத்து தனியார் எரிபொருள் நிலையங்களும் தற்போது வழக்கம் போல் எரிபொருளை விநியோகித்து வருவதாகவும் கூறியுள்ளது.
சீன தூதரகம் மற்றும் இந்திய உயர் ஆணையகத்திற்கு பிரச்சினை குறித்து தெளிவுப்படுத்தப்பட்ட நிலையில், கிடைக்கப்பெற்ற ஆதரவு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற உதவியதாகவும் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகள் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.