கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று பெட்ரோல் கொள்வனவு செய்த பொலிஸார்
யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இன்றையதினம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரும் அரச ஊழியர்கள் நேற்று தொடக்கமும் வரிசையில் நின்று பெட்ரோலை கொள்வனவு செய்துள்ளனர்.
இதன்போது திடீரென 20ற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னுக்கு சென்று பெட்ரோல் நிரப்புவதற்கு முற்பட்டனர். இதனால் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.இதனால் அங்கு முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த பொலிஸார் பெட்ரோல் நிரப்புவதற்கு வந்திருந்த பொலிஸாரை முன்னே அழைத்துச் சென்று எரிபொருள் நிரப்புவதற்கு வழிசெய்து கொடுத்தனர். அதற்கு பின்னர் வந்த பொலிஸார் கர்ப்பிணி தாய்மாரின் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பி சென்றனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸாருக்கு அனுமதி
இதற்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் பொலிஸாருக்கு பூரணமான அனுமதியை வழங்கியதுடன், விரைவில் அவர்களுக்கு பெட்ரோலையும் வழங்கியுள்ளனர்.
ஊடகவியலாளர் ஒருவர் "ஊடகவியலாளர்களுக்கு விசேடமான ஒதுக்கீடு ஏதாவது உள்ளதா?" என எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பிய ஊழியரை வினவிய வேளை "ஊடகவியலாளர்களுக்கு செருப்பால் தான் அடித்து அனுப்புவோம்" என கூறியுள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தையும் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அவதானித்துக்கொண்டிருந்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தினரதும் அத்துமீறி பெட்ரோலை பெற்றுச் சென்ற
பொலிஸாரின் செயற்பாடுகளையும் அவதானித்த மக்களும் அரச உத்தியோகத்தர்களும்
விசனம் தெரிவித்துள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 6 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
