நாட்டின் தேசியப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வேலு குமார் தகவல்
நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிபொருள் விநியோகத்தை வெளிநாடுகளுக்கு ஒப்படைப்பதன் மூலம் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்றைய தினம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சக்தியின் உதவி ஆபத்தானது
எரிபொருள் விநியோகத்திற்கு வெளிநாட்டு சக்தியின் உதவியை பெறுவது ஆபத்தானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் பல கிலோ மீற்றர் தூரம் காத்திருப்பதாகவும், பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தேசியப் பாதுகாப்பினை நிலைநிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறிய கோட்டாபய ராஜபக்ச, நாட்டை பாதுகாக்க என்ன செய்கின்றார் என வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.