எங்களை வீதிகளில் இருந்து அடித்து விரட்டுகின்றனர்! பேலியகொடவில் குழப்பம் (Video)
கம்பஹா - பேலியகொட பகுதியில் எரிவாயு வழங்கக் கோரி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வரிசையில் காத்திருக்கும் மக்கள் கூறுகையில், எரிவாயு இல்லாத காரணத்தால் தான் நாங்கள் வந்து இவ்வாறு வீதியில் நிற்கின்றோம்.
எனினும் தற்போது மக்களுக்கிடையில் அடித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எரிவாயு இல்லை என நாங்கள் வீதியை மறிக்க முற்படும் போது மக்களே வந்து தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இளைஞரொருவருக்கும் தாக்கியுள்ளனர். பொல்லுகளையும் தடிகளையும் தூக்கிக் கொண்டு வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், எரிவாயு கிடைக்காமையால் வீதிகளை மறித்து அமர்ந்த எங்களை அடித்து விரட்டுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமையல் எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு லிட்ரோ வெளியிட்ட முக்கிய தகவல் |
இதேவேளை, வீட்டு எரிவாயு கொள்கலன்களை வழங்குவதற்கு போதியளவு எரிவாயு கையிருப்பு இல்லாததால், தேவையில்லாமல் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
