யாழிலிருந்து அம்பாறை சென்ற அரச பேருந்தில் ஏற்பட்டுள்ள குழப்பம்!
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கி சற்றுமுன்னர் பயணித்த அரச பேருந்தில் கொள்ளை சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த அரச பேருந்தில் பயணித்த மூவர் பேருந்தின் நடத்தினரைத் கீழே தள்ளிவிட்டு அவரிடமிருந்து 59 ஆயிரத்து 177 ரூபா பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் சற்று முன்னர் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் தீவிர விசாரணை
சந்தேகநபர்கள் மூவர் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்து உமையாள்புரம் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்குவதற்காக முற்பட்ட சமயத்தில்நடத்துனரை தள்ளிவிட்டு அவரிடமிருந்த பணத்தினை கொள்ளையிட்டு தப்பியோடியுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, பல்லசுட்டி பகுதியில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 1 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
