யாழில் இரு வெவ்வேறு இடங்களில் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்
நாட்டில் பல பகுதிகளில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் பல குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழில் இடம்பெற்ற சம்பவங்கள்
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 59 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பான தகவல்களுடன் கடந்த வாரங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் தொடர்பான விரிவான தகவல்களை தொகுத்து வருகிறது குற்றப்பார்வை