முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது(Photo)
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பிரதேசத்தில் இரண்டு வாகனங்களில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற குற்றச்சாட்டில் இராணுவ புலனாய்வு பிரிவினர் கொடுத்த தகவலுக்கமைய இரண்டு வாகனங்களும் அதில் இருந்த 10 பேரையும் முள்ளியவளை பொலிஸார் நேற்று(01) இரவு கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தென்பகுதியினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள்
இவர்களிடம் இருந்து ஸ்கானர் இயந்திரம் ஒன்று மற்றும் பூசை வழிபாட்டுக்குரிய பொருட்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் யாஎல பகுதியினை சேர்ந்த இருவர், அம்பலாந்தோட்டை பகுதியினை சேர்ந்த மூவர்,பதவிசிறீபுர பகுதியினை சேர்ந்த இருவர், அவிசாவளையினை சேர்ந்த ஒருவர், மொரட்டுவ பகுதியினை சேர்ந்த ஒருவர் மற்றும் கண்டியை சேர்ந்த ஒருவர் என 10 பேரை முள்ளியவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதையல்
புதையல் தோண்ட வந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்து இவர்களிடம் இருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று(02) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது பத்து பேரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் எங்கு வந்தார்கள், யாருடன் தொடர்பில் இருந்தார்கள், எங்கு சென்றார்கள்
உள்ளிட்ட மேலதிக விசாரணையினையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.