மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் ஹர்திக் பாண்டியா சந்திப்பு
எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதி ஆரம்பமாகும் இலங்கை - இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய டி20 போட்டிகளுக்கான தலைவர் ஹர்திக் பாண்டியா மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
சகலதுறை ஆட்டவீரர் ஹர்திக் பாண்டியாவுடன் அவரது சகோதரர் க்ருணால் பாண்டியாவும் நேற்று (31.12.2022) சனிக்கிழமை அன்று அமைச்சரை சந்தித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் வெளியீடு
உள்துறை அமைச்சரை இருவரும் சந்திக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.
''மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித்ஷா ஜி, உங்களுடைய விலைமதிப்பற்ற நேரத்தில் எங்களை அழைத்ததற்கு நன்றி, உங்களைச் சந்தித்தது மரியாதை மற்றும் பாக்கியம்'' என்று ஹர்திக் பாண்டியா டுவிட் செய்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை 29 வயதான ஹர்திக் தலைமை தாங்கி வழிநடத்துவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
