விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல் (Video)

Maithripala Sirisena Sri Lanka Politician Sri Lankan political crisis Angajan Ramanathan
By Theepan Jul 02, 2023 10:58 AM GMT
Report

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடக சந்திப்பு இன்று (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூரில் உள்ள ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.


மரபணு பரிசோதனை

மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது.

நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.

இது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறுவதற்கு முயற்சித்த போதிலும் அதனை இராணுவத்தினர் மறுத்திருந்தனர் என தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல் (Video) | Srilanka Crisis Political Situation And Tamils

இறுதி யுத்த வெற்றி

எனினும் தாமே இறுதி யுத்தத்தை நடத்தியதாகவும் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் தமக்கே பாரிய பங்கு உள்ளதாகவும் ஜனாதிபதியாக இருந்த போது, மைத்திரிபால சிறிசேன கூறியமை தொடர்பாகவும் ஊடகவியலாளர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு தொடர்ந்தும் பதில் அளித்த மைத்திரிபால சிறிசேன அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச வெளிநாட்டில் இருந்த போதிலும் பாதுகாப்பு சார்ந்த உத்தரவுகளை அவரே வழங்கியிருந்தார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் யுத்தத்தை வழிநடத்திய விடயத்தில் தமக்கு எந்தவொரு தொடர்பும் இருக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளாார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல் (Video) | Srilanka Crisis Political Situation And Tamils

தம்மிடம் பொறுப்புகளை கையளித்துவிட்டு ஜனாதிபதி அப்போது வெளிநாடு சென்றிருந்தார் எனவும் முன்னெடுக்கப்பட்டு வந்த செயற்பாடுகளை தாம் தொடர்ந்ததாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக எந்தவொரு விடயமும் தமக்கு அறிக்கையிடப்படவில்லை என மைத்திரிபால சிறிசேன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் யாழ்,கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி

விடுதலைப் புலிகளின் தலைவர் மரணம் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட தகவல் (Video) | Srilanka Crisis Political Situation And Tamils

இதேவேளை மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

மேலும், பாபர் மசூதிகளை இந்து பிரதேசங்களில் உருவாக்கதீர்கள். தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி. அதை கட்டிய பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் எடுத்துரைத்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, வவுனியா, கனடா, Canada

23 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை சிறுவிளான்

24 May, 2012
7ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Coventry, United Kingdom

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, மல்லாகம், London, United Kingdom

21 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டாவளை, பிரான்ஸ், France, பின்லான்ட், Finland, புளியம்பொக்கணை

21 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, பருத்தித்துறை

24 May, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US