சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோருக்குக் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸார் எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று மேலும் வீரியமடைந்துள்ள நிலையில், சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோருக்குக் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் உள்ளிட்ட சுகாதார ஒழுங்கு விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி பொது இடங்களில் சுகாதார ஒழுங்கு விதிகளை மீறும் நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் முகக்கவசம் அணியாது சுற்றித் திரிந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
வீட்டில் இருந்து வெளியே வரும் போது முகக்கவசங்கள் அணிவது கட்டாயம் எனவும், ரயில்கள்,பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் போது மறக்காது முகக்கவசத்தை அணிந்து சமூக இடைவெளியைப் பேண வேண்டும் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, பேருந்துகளில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லுதல், சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்றி நடத்தப்படும் நிகழ்வுகள் தொடர்பாகவும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர் எனவும், இவ்வாறாக ஒழுங்கு விதிகளை மீறுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan