பொலிஸ் திணைக்களத்தினால் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள மொபைல் செயலி
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பொலிஸ் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் தங்கள் விரல் நுனியில் அணுகும் வசதியை வழங்குவதற்காக, ஒரு விசேடதிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையின் கீழ் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தின் முடிவில், IOS மற்றும் ஆண்ட்ராய்டு (IOS and Android) இயக்க முறைமைகளுக்கு ஏற்ற ஒரு மொபைல் செயலியும் (Mobile App) , ஒரு புதிய பொலிஸ் இணையதளமும் கைபேசியின் (Device) ஊடாக அணுகுவதற்கு கிடைக்கப்பெறும். இந்த மொபைல் செயலி மூலம்(App), பொலிஸ் ஊடகப் பிரிவினால் சமூக ஊடகங்கள் வழியாக வழங்கப்படும் தகவல்கள், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எளிதாகக் பார்வையிட முடியும்.
விரைவில் அறிமுகம்
மேலும், எந்தவொரு அவசரத் தகவலையும் அறிவிப்பு (Notification) வசதி மூலம் உடனடியாக பயனர்களுக்கு வழங்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.
பொலிஸ் அனுமதி அறிக்கை விண்ணப்பங்கள், அவசரகால தொலைபேசி எண்கள் மற்றும் அவசரகால இருப்பிட எச்சரிக்கைகள் (Location Alerts) போன்ற பொலிஸ் சேவைகளை எளிதாக அணுகும் வகையில் இந்த மொபைல் செயலி உருவாக்கப்பட உள்ளது.

மென்பொருள் மேம்பாட்டு தனியார் நிறுவனத்தினால் உருவாக்கப்படும் இந்த செயலி மற்றும் இணையதளத்திற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் கட்டுப்பாட்டையும் பொலிஸ் திணைக்கள தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழங்குகிறது, மேலும் இதன் உள்ளடக்கத்தை பொலிஸ் ஊடகப் பிரிவு வடிவமைக்கின்றது.
அதன்படி, இந்தச் செயலி விரைவில் சகல பிரஜைகளினதும் நவீன கைபேசியிலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக (App) மாறும். இதன்மூலம், பொலிஸ் திணைக்கள சேவைகளைப் பெறவும் தகவல்களைப் பெறவும் பல்வேறு வழிகளில் செலவிடப்படும் பொதுமக்களின் நேரத்தையும் முயற்சியையும் இது சேமிக்கவும் இந்த மொபைல் செயலி உதவும்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam