சுகாதார அமைச்சின் மருந்து விநியோக வாகனங்களில் போதை பொருள் கடத்தல்! அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல தகவல்களை வெளியிடுகிறார் வைத்தியர் சமல் சஞ்சீவ
அரசாங்கத்தின் மருந்து பொருட்கள் விநியோகிக்கும் வாகனங்களில் போதை பொருள் கடத்தப்படுவது அதிரடிப்படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தகவல் வெளிவரவில்லை என வைத்தியர்களின் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள். கொழும்பை மையமாகக் கொண்டு நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் செயற்பாட்டை மருத்துவ விநியோகப் பிரிவே (Medical Supplies Division) மேற்கொள்கிறது.
மருத்துகள் விநியோகிக்கும் வாகனங்களில் போதை பொருட்கள்
கடந்த காலங்களில், இந்த மருத்துவ விநியோகப் பிரிவில் இருந்து வெளிப் பிரதேசங்களுக்கு மருந்துகளை ஏற்றிச் சென்ற வாகனங்கள் சிலவற்றில், விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அனுராதபுரம், கெக்கிராவ போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் இவ்வாறான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்த விபரம் வெளியில் வரவில்லை. நான் மட்டும்தான் இது தொடர்பில் பேசினேன். எனக்கு இந்தத் தகவல்கள் கிடைத்த பின்னர், நான் இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) சென்று முறைப்பாடு செய்தேன்.

அனுராதபுரம் பொலிஸ் பிரிவு, விசேட அதிரடிப்படை மற்றும் இந்தச் சோதனைகளை நடத்திய அதிகாரிகளின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே நான் இந்த உண்மைகளை வெளிப்படுத்தினேன்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்தேன். தற்போது வரை இதில் எந்தப் புதிய முன்னேற்றமும் இல்லை.
அதேபோல, இந்தச் சோதனைகளின் பின்னர் விசேட அதிரடிப்படையினர் மருத்துவ விநியோகப் பிரிவின் சில அதிகாரிகளிடம் விசாரணைகளை நடத்தியதாகவும் தகவல்கள் உள்ளன.
எனினும், சுகாதார அமைச்சின் சில தனிப்பட்ட தலையீடுகள் காரணமாக கைது செய்யப்பட்ட சில சாரதிகள் - உதவியாளர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது.
மறைக்கப்படும் தகவல்கள்
அழுத்தங்கள் இருப்பதாக நேரடியாகப் பதிவாகவில்லை. ஆனால் இது மிகவும் பாரதூரமான ஒரு நிலைமையாகும். பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நடத்திய சோதனைகளின் அடிப்படையிலேயே நாங்கள் இதனை வெளிப்படுத்துகிறோம். நீதிமன்றங்களில் கூட இது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் இச்சம்பவங்கள் நடந்துள்ளதால், இது குறித்து விசாரிக்கக் கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்தோம்.
மருத்துவ விநியோகப் பிரிவுக்குள் பணிபுரியும் குழுக்கள், நிறுவனத்தின் உள்ளே இருந்தே போதைப்பொருட்களை ஏற்றி அனுப்புவதில்லை.
மாறாக, மருத்துவ விநியோகப் பிரிவின் வாகனங்கள் வெளியில் செல்லும் போது வழியிலேயே இது நடக்கிறது. இந்த வாகனங்கள் வெளியில் சென்ற பின்னரே இது நடக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
பொதுவாக, இந்த வாகனங்கள் மாலை 6, 7 அல்லது இரவு 8 மணியளவிலேயே அனுராதபுரம், பொலன்னறுவை, கெக்கிராவ, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற பிரதேசங்களை நோக்கிப் புறப்படுகின்றன.
அவ்வாறு புறப்பட்டுச் செல்லும் வழியில், இந்த வாகனங்கள் பல இடங்களில் நிறுத்தப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என குறிப்பிட்டார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan