இன்னும் 2 நாட்களில்..! றீச்சா பண்ணையின் மாபெரும் உணவுத் திருவிழா - இன்றே பதிவு செய்யுங்கள்
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள றீச்சாவில் நடைபெறவுள்ள மாபெரும் உணவுத் திருவிழா இன்னும் சில தினங்களில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.
இந்த மாபெரும் உணவுத் திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாகி, 8 மற்றும் 9ஆம் திகதிகள் உட்பட மூன்று நாட்கள் மாலை 6 மணி முதல் 10 வரை நடைபெறவுள்ளது.
நீங்களும் இணைந்து கொள்ளலாம்...
இந்த உணவுத் திருவிழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் கலந்துக் கொள்ளவுள்ளதுடன், சுற்றுலாப் பயணிகளும் இணைந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உணவுத் திருவிழாவை முன்னிட்டு றீச்சாவில் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், றீச்சாவின் உணவுத் திருவிழாவிற்கு QICK FOOD அனுசரணை வழங்குவதுடன், லங்காசிறி, தமிழ்வின் மற்றும் ஐபிசி தமிழ் ஆகிய ஊடகங்கள் இணைந்து இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளன.
உணவு திருவிழாவில் நீங்களும் ஒரு ஆளாக இருக்க வேண்டும் என்றால் 077 7772354 என்ற இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு உங்களுடைய டிக்கெட்டுக்களை பெற்றுக் கொள்ளும் அதே சமயத்தில், அக்க்ஷய பாத்திரத்தில் நீங்களும் ஒரு நபராக இருந்து உணவை சுவைக்கலாம்.