அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்..

2019 Sri Lanka Easter bombings Maithripala Sirisena Easter Attack Sri Lanka Pujith Jayasundara
By Benat Aug 05, 2026 03:25 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் அரங்கேறியபோது, பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளுக்கு பொறுப்பானவராகவும் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்த நிலையில், தாக்குதல் தொடர்பான பொறுப்புக்களில் இருந்து அவர் எப்படி விலக முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தடுக்கத் தவறியதாகத் தெரிவித்துள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வழக்குத் தொடர பரிந்துரை

2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட விஜித மலல்கொட அறிக்கைக்கு அமைவாகவே இவர்கள் இருவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது. எனினும், அந்த அறிக்கையில் 14 பேருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

மேலும், 2019ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்று, 2022இல் நிறைவடைந்தது.

அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்.. | Maithri Gets Caught In Easter Attack Case

அந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் பிரதிவாதிகளாக இருந்தனர்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் முடிவுற்றப் போது, பூஜித் மற்றும் மைத்திரி ஆகிய இருவருக்கு நட்டஈடு செலுத்துமாறு தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அப்போது உயர்நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் இருவரான மைத்திரிபால சிறிசேன மற்றும் நிலந்த ஜயவர்தன ஆகியோரை சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில் இணைக்கவில்லை.

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் வேண்டுமென்றே தனது கடமையை மீறியுள்ளது. தண்டனை வழங்கப்பட வேண்டிய இருவரை சட்டமா அதிபர் திணைக்களம் விடுவித்துள்ளது.

அடுத்த இலக்கு மைத்திரி! அரசாங்கத்தை உசுப்பேற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள்.. | Maithri Gets Caught In Easter Attack Case

அவ்வாறு எப்படி நடக்க முடியும். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் நிலந்த ஜயவர்தன மற்றும் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

தாக்குதல் சம்பவம் நடக்கும் போது பாதுகாப்பு அமைச்சு, முப்படைகளும் மைத்திரிபால சிறிசேனவிடமே இருந்தது. அவர் எப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

அந்த விசாரணைகள் நடக்கும் போதே 2022இல் தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் இருவரும் எப்படி விடுவிக்கப்பட்டனர். சட்டமா அதிபர் திணைக்களம் தெளிவாக தனது கடமைகளை மீறியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

மேர்வின் விடயத்தில் சிக்கிய பிரபல நடிகை

மேர்வின் விடயத்தில் சிக்கிய பிரபல நடிகை

அதிவேக பாதை வாகனங்கள் குறித்த கட்டாய நடைமுறை - வெளியான புதிய அறிவிப்பு

அதிவேக பாதை வாகனங்கள் குறித்த கட்டாய நடைமுறை - வெளியான புதிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US