அதிவேக பாதை வாகனங்கள் குறித்த கட்டாய நடைமுறை - வெளியான புதிய அறிவிப்பு
அதிவேக பாதைகளில் இயங்கும் வாகனங்களில் ஆசனப்பட்டிகளை பொருத்துவதற்கு வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைக் காலத்தை அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு நீடித்துள்ளது.
தொழில்துறை பங்காளர்களின் கோரிக்கைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசனப்பட்டி அணிதல்
மோட்டார் வாகனச் சட்டத்திற்கு அமைவாக வெளியிடப்பட்ட 2011ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மோட்டார் வாகனங்கள் (அதிவேகப் பாதைகள்) கட்டளையின் கீழ், அதிவேகப் பாதைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆசனப்பட்டிகள் இல்லாத வாகனங்களில் அவற்றை மறுசீரமைத்துப் பொருத்துவதற்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆரம்ப சலுகை காலம் கடந்த ஜூன் 19ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

சலுகை காலம் நீடிப்பு
இந்த காலக்கெடுவை நீடிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஜூன் 17ஆம் திகதியிட்ட 2493/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கம் இக்கட்டளையில் திருத்தம் செய்து, சலுகை காலத்தை எதிர்வரும் செப்டெம்பர் 19 வரை நீடித்தது.
நாடாளுமன்ற ஒப்புதலுக்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.