இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள்

Sri Lanka Police Ampara Kandy Nuwara Eliya Death
By Vethu Jun 19, 2026 02:03 AM GMT
Report

கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பான பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர் 33 வயதான ஷம்யா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிரிந்த பெண்ணும் அவரின் காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெருந்தொகை பணம் கடனாக பெற்றிருந்தார்.

மன அழுத்தம்

எனினும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தமையினால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை மீள கோரியுள்ளனர்.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள் | Women Killed In Cinema Style In Sri Lanka

இதன் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த மூன்றாம் திகதி நுவரெலியாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டு சென்ற காரில் இருந்து குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது காதலனே சடலத்தைக் காரில் எடுத்துவந்து தெல்தெனிய பகுதியில் உள்ள இடத்தில் கைவிட்டு தப்பிச் சென்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணிபுரிந்த வெலிகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பது தெரியவந்துள்ளது.

அவர் கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தகவல்களைக் கண்டறிந்துள்ளனர்.

வைத்திய ஆலோசனை

அதன்படி, அந்த ஹோட்டலின் சிசிடிவி காட்சிகளைப் பரிசோதித்தபோது, மயக்க நிலையில் இருந்த அந்தப் பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சந்தேக நபரான காதலன் கன்​னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் என்றும், அவர் தற்போது அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் படுகொலை - பொலிஸார் வெளியிட்ட பகீர் தகவல்கள் | Women Killed In Cinema Style In Sri Lanka  

கடந்த மூன்றாம் திகதியில் இருந்து 16ஆம் திகதி வரை நுவரெலியா ஹோட்டலில் தங்கியிருந்த காலப்பகுதியில், பல நாட்கள் தான் உணவு கொள்ளவில்லை என அவரின் சகோதரனுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்கான வைத்திய ஆலோசனை பெற்றதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தலைமறைவாகி உள்ள காதலனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

கண்டி, கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான காதலனுக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US