ஆசியக்கிண்ண வெற்றியின் நன்மதிப்பை பெற நாமல் முயற்சி
2021 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உலகக்கிண்ண டி20 போட்டியில் இலங்கை அணியை நாசப்படுத்திய நிலையில், ஆசியக்கிண்ண வெற்றியின் நன்மதிப்பை பெற நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச முயற்சித்தமை கேலிக்கூத்தாகும் என எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
2021 ஜூலை முதல் ஒழுக்காற்று அடிப்படையில் குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை ஒரு வருடத்திற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை இடைநீக்கம் செய்துள்ளது.
இலங்கை அணியின் தொடர் தோல்வி
எனினும் இந்த மூன்று பேரும், சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்ற அடிப்படையில், 2021, டி 20 உலகக்கிண்ண அணி தெரிவின் போது, இலங்கையின் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ஆர்வலர்கள் சார்பில் அப்போதைய விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் தாம், குறித்த மூவரின் தடைகளை நீக்குமாறு கோரிக்கை வைத்த போதும், அவர் ஒழுக்கத்தை காரணம் காட்டி, கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்தார்.
இதன் விளைவு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும்
தென்னாபிரிக்கா அணிகளிடம் கடும் தோல்வியடைந்து இலங்கை அணி முதல் சுற்றிலேயே
வெளியேறியது என்று லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.