வனிந்து ஹசரங்க குறித்து கவனமாக இருங்கள்! முத்தையா முரளிதரன் வெளியிட்டுள்ள தகவல்
அவுஸ்திரேலிய ஆடுகளங்களில், இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர், வனிந்து ஹசரங்கவுக்கு எதிராக கவனமாக இருக்க வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹசரங்க ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அணியை ஆசிய கிண்ண பட்டத்தை வென்றெடுக்க உதவியுள்ளார்.

இடதுமுறை சுழல் பந்து வீச்சாளர்கள்
எனவே டி20 உலகக்கிண்ணத்தின் போது, கவனிக்க வேண்டிய ஒருவராக அவர் இருப்பார் என்றும் முரளிதரன் கூறியுள்ளார்.

அவர் ஒரு சிறந்த டி 20 பந்துவீச்சாளர். கடந்த 2-3 ஆண்டுகளாக, அவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டார் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
"அவுஸ்திரேலியாவில், கண்டிப்பாக லெக் ஸ்பின்னருக்கு (இடது முறை சுழல் பந்து
வீச்சாளர்களுக்கு ) அதிக வாய்ப்புகள் இருக்கும். எனவே அவருக்கு எதிராக
துடுப்பாடுவது கடினமான இருக்கும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 20 மணி நேரம் முன்
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri