இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வினை புறக்கணிக்க பல தரப்பினர் முடிவு
இன்று (04) நடைபெறவுள்ள 75வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இவ்வேளையில் இவ்வாறான வைபவத்தில் கலந்து கொள்வதில்லை என எதிர்கட்சித் தலைவர் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வருட சுதந்திர வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்கப்போவதில்லை எனவும் அறிவித்திருந்தது.
பொருளாதார நெருக்கடி
அதற்கமைய, சுதந்திரக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பில் கறுப்புப் போராட்ட தினம் அறிவிக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கத்தோலிக்க திருச்சபையும் இவ்வருட சுதந்திர தினத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.
இதேவேளை, கலாநிதி ஓமல்பே சோபித தேரர் உள்ளிட்டோர் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டாம் என்று கோரி பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை அண்மையில் கையளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
