திருகோணமலையில் காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்ற சிறீதரன்
திருகோணமலை, சல்லி பகுதியில் இருந்து அண்மையில் கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் காணாமல்போயுள்ள நிலையில், அவர்களின் வீடுகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று விஜயம் செய்துள்ளார்.
இந்த மாதம் 20 ஆம் திகதி சல்லி பகுதியில் இருந்து காலை 10 மணியளவில் கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் மாயமாகியுள்ளனர். சல்லி, 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த குட்டிராசா சசிக்குமார் (வயது 45), முருகையா சுஜந்தன் (வயது 22) என்பவர்களே காணாமல்போயுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கை தொடர்கின்ற போதிலும் அவர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் அறிந்த சிறீதரன் எம்.பி காணாமல்போன கடற்றொழிலாளர்களின் வீடுகளுக்கு இன்று சென்று அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
தேடுதல் நடவடிக்கைக்காக மேலும் பல உரிய தரப்புக்களுடன் பேசுவதாகவும் சிறீதரன் எம்.பி. இதன்போது தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கூலி படத்திற்காக நாகர்ஜுனா வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
