சுமந்திரன் தீர்மானத்திற்கு அடிபணிகிறாரா சிறீதரன்! டக்ளஸுடன் இணைந்தமை தொடர்பில் விளக்கம்
டக்ளஸ் தரப்புடன் சேர்ந்து தமது கட்சி ஆட்சி அமைப்பதை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்
நேற்று பிற்பகல் (11-06-2025)கிளிநொச்சி முரசு மோட்டை யில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுக்கையில்,
சி.வி. கே சிவஞானம்
இலங்கை தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த கட்சிகளுடன் பேசி நாங்கள் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எடுத்துள்ள ஆசனங்களின் அடிப்படையில் யார் எந்த கட்சி கூடுதலாக ஆசனங்களை பெற்றுள்ளதோ அந்த கட்சிகளுக்கு குறைந்த ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆதரவு வழங்கி ஆட்சி அமைப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தோம்.

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி. கே சிவஞானம் ஈ.பி.டீ.பியினுடைய அலுவலகத்துக்கு சென்று பேசியமை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயம்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களினுடைய இனச் சுத்திகரிப்பு அடக்குமுறைகளுக்கு ஈபிடிபி துணையாக இருந்திருக்கின்றது.
ஆகவே நாங்கள் ஒருபோதும் ஈ.பீ.டிபி யுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
9 நாட்களில் ரஜினியின் படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸில் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam