இன்று முதல் QR முறையில் எரிபொருள்! வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாடு முழுவதும் QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நிரப்பு நிலையங்களும் QR குறியீட்டு முறை
இன்று காலை 8:00 - 9:00 மணியளவில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் QR குறியீட்டு முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், கேன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது.
பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் வந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒருவரின் QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு வாகனங்களுக்கு எரிபொருள் கோரினால் அதனை வழங்கப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்
மேலும், புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களுக்கு QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கிறோம்.
எனவே, பொதுமக்கள் தமக்குரிய QR குறியீட்டுடன் தமது வாகனத்திலேயே வருகை தந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்." என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போகும் கோமதி.. மகன்களிடம் ரூ. 10 லட்சத்தை திரும்ப கேட்ட பாண்டியன்.. அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸில் நடக்கப்போவது இதுதான் Cineulagam
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri