ஐரோப்பாவில் வேலை வாய்ப்பு: பல லட்சங்களை ஏமாற்றிய பெண்
ருமேனியா மற்றும் துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் பெற்ற பெண் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணை கொழும்பு நீதிமன்ற இலக்கம் 05 இல் முன்னிலைப்படுத்தியதன் பின்னர், 100 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் ருமேனியாவில் வேலை வழங்குவதற்காக 09 இலட்சம் ரூபாவையும் துபாயில் வேலை வழங்குவதற்காக 1,50,000 ரூபாவையும் பெற்றுள்ளார்.
வெளிநாட்டு வேலை
எனினும், வாக்குறுதியளித்தபடி தமக்கு வேலை கிடைக்கவில்லை என இரண்டு பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் வெளிநாட்டு வேலைகளை வழங்குவதற்கு உரிய அனுமதிப்பத்திரம் பெறவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆட்கடத்தல்
இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.