ஜெனீவாவில் ஒன்று திரண்ட இலங்கை தமிழர்கள்
தமிழ் இனப்படுகொலைக்கு நீதி மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி, நேற்று(15.09.2025) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பாரிய பேரணி நடத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை இடம்பெற்றுள்ள நிலையில், இந்த பேரணி நடைபெற்றுள்ளது.
இனப்படுகொலையை நடத்தியதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான தமிழர்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வெளியில் கூடி இந்த பேரணியை நடத்தியுள்ளனர்.
தியாக தீபம் திலீபன்
முன்னதாக, தியாக தீபம் திலீபன் சாகும் வரை உணவுத்தவிர்ப்பை மேற்கொண்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பேரணியில் பங்கேற்றோர், அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
