தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர் பிரச்சினை குறித்து பேசுகின்றார்களா: தமிழர் அமைப்பின் பிரதிநிதி கருத்து (Video)
மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்குச் சென்ற தமிழ் அரசியல் தலைவர்கள், மக்களைச் சார்ந்த எல்லா பிரச்சினைகளிலும் பங்குபற்றவேண்டியது உயிருக்கு மேலான கடமை என உலக வாழ் புலம்பெயர் தமிழர் அமைப்பின் பிரதிநிதி நிமலன் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் உண்மையில் தமிழ் சமுதாய பிரச்சினைகள் குறித்து பேசுகின்றார்களா என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யுத்தம் நிறைவுற்ற 11 வருடங்கள். இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக என்ன சாதித்துள்ளனர். அரசியல் கைதிகளின் விடுதலை, திட்டமிட்ட இனப்படுகொலை பிரச்சினை மற்றும் சர்வதேச நீதிகள் பொறிமுறை இது சம்பந்தமான தமிழ் அரசியல் தலைவர்கள் கதைத்திருக்கின்றார்களா,
ஐக்கிய நாடுகள், ஜெனிவா குறித்துப் பேசுகின்றீர்கள். இவர்கள் யாராவது தங்களுடைய ஆதிகத்தையோ பிரச்சினைகளையோ, காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றியோ பேசுகின்றார்களா.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நடத்தும் எந்த ஒரு போராட்டத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்கின்றார்களா, இல்லை. மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள். மக்களைச் சார்ந்த எல்லா பிரச்சினைகளிலும் பங்குபற்றவேண்டியது உயிருக்கு மேலான கடமை எனத் தெரிவித்துள்ளார்.





15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
