சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்
சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் மதுபான கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில், இலங்கை தமிழ் பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (வயது 18) என்ற இலங்கை பெண் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது
பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசிடிவி கமரா காட்சிகள் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விடுதிக்கும் சீல்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்துள்ளனர்.
சென்னை,விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த யுவதி பாடசாலையில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். திருவள்ளூரை சேர்ந்த இவரது தோழியுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார்.
இதையடுத்து சென்னை வந்த யாசினி பல்வேறு இடங்களுக்கு தோழிகளுடன் சென்று சுற்றி பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன்போது 20 ஆம் திகதி சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு விடுதியில் நடன நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அந்த இளம்பெண் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கேளிக்கை விடுதியில் இருந்த ஒரு கும்பல் அவரை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.
தாய் விடுத்துள்ள கோரிக்கை
இந்த சம்பவத்தில் இளம்பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.

குறித்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுமி பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மதுவிலக்கு ஆயத்தீர்வு துணை ஆணை மணிகண்டன் விடுதிக்கு சீல் வைத்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த யுவதி இலங்கை தமிழர் எனவும், பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு பிரச்சினையால் அவரது குடும்பத்தினர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த யுவதியின் தாய் மேரி ஸ்டெல்லா முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO