சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் - இலங்கை தமிழ் பெண் கொடூரமாக கொலை
சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் நேற்றிரவு (30) இடம்பெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் மோதல்
சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 18 வயதான யான்சி என்பவரே உயிரிழந்துள்ளார்.

இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பாரில் இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிய நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது பெரும் மோதலாக மாறியுள்ளது.
இந்த நிலையில், அந்த இளம்பெண் அங்கிருந்து வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, பாரில் இருந்த ஒரு கும்பல் அவரை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிள் மீது காரை ஏற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இளம்பெண் காரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஒருவர் கைது
குறித்த பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற சிறுமி பலத்த காயமடைந்து தற்போது தீவிர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோயம்பேடு பொலிஸார் உடனடியாக விரைந்து உடலைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த கொலை மற்றும் மோதல் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.