இந்திய கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கைது
படகு பழுதடைந்ததன் காரணமாக இந்திய (India) கடல் பகுதியில் தத்தளித்த இலங்கையின் வடக்கு கடற்றொழிலாளர்கள் 4 பேர் இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 57 வயதான அருளானந்தசாமி ராமகிருஸ்ணன், 64 வயதான முஸ்தஹின், 61வயதான நற்குணம் குணபாலசிங்கம் மற்றும் 62 வயதான திருகோணமலையை சேர்ந்த பிரேம் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்று இந்திய தகவல்கள் கூறுகின்றன.
குறித்த கடற்றொழிலாளர்கள், அவர்களின் படகு பழுதடைந்ததை அடுத்து, கடலில் தத்தளித்துள்ளனர்.
பலத்த காற்று
இந்நிலையில், வீசிய பலத்த காற்று காரணமாக, அவர்களின் படகு இந்திய கடல் பகுதிக்குள் தள்ளிச் செல்லப்பட்டுள்ளது.
இதனை தொடரந்து, கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்த கடற்றொழிலாளர்களை காசிமேடு கடற்றொழிலாளர்கள் கண்ட நிலையில், கடலோர பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, குறித்த இலங்கை கடற்றொழிலாளர்கள், கைது செய்யப்பட்டு சென்னை துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |