முல்லைத்தீவில் உணவுப் பொதி வாங்கி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
முல்லைத்தீவு- உடையார்கட்டு பகுதியில் அமைந்துள்ள பிரபலமான உணவகமொன்றில் விற்பனை செய்யப்பட்ட உணவுப் பொதியில் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(11) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், அதே பகுதியை சேர்ந்த நபரொருவர் மதிய உணவிற்காக குறித்த உணவகத்தில் இருந்து ஐந்து பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார்.
மீன் பொரியலுக்குள் புழுக்கள்
பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, உணவில் வழங்கப்பட்டிருந்த மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகளை மீறியதாக கண்டறிந்துள்ளனர்.
வழக்கு தாக்கல்
இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவின் தரத்தினை பேணுவதில் அலட்சியம் காட்டும் உணவகங்கள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan