புதிய கலாச்சாரத் தூதுவர் யொஹானி - இலங்கை யுவதிக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரம்
இலங்கை யுவதியான யொஹானியின் (Yohani Diloka de Silva) மெனிக்கே மகே ஹிதே பாடல் தற்போது உலகளவில் மிகவும் பரவலாக பேசும் இடத்தை பிடித்துள்ளது.
குறித்த பாடல் இலங்கையை தாண்டி உலகளாவிய ரீதியில் மிகவும் பிரசித்தி பெற்றுள்ளதுடன், தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் "யூடியூப்" பார்வைகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டிய பாடல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி சேவைகளில் புதிய கலாச்சாரத் தூதுவர் யொஹானி டி சில்வா தோன்றுவதில் பெருமிதம் கொள்கிறோம் என மிகப்பெரிய அங்கீகாரமொன்றை வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும்,
யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிக தடவைகள் பார்க்கப்பட்ட 'மெனிகே மகேஹிதே' பாடல், பிரபலங்கள் முதல் பொது மக்கள் வரை இந்தியாவில் பல மில்லியன்  மக்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
இது, பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின் ஆழத்தை, பிரதிபலிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூப்பில் 110 மில்லியனுக்கும் அதிகதடவைகள் பார்க்கப்பட்ட 'மெனிகே மகேஹிதே'பாடல், பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை இந்தியாவில் பலமில்லியன் மக்களின் இதயங்களைக்கவர்ந்துள்ளது. இது,பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையானதும் உண்மையில் இயல்பானதுமான இந்திய இலங்கை உறவின்ஆழத்தை, பிரதிபலிக்கின்றது.
— India in Sri Lanka (@IndiainSL) September 18, 2021
தொடர்புடைய செய்தி...
உலகப்புகழை ஈட்டியுள்ள யோஹானிக்கு வாழ்த்து கூறிய இளைஞர் விவகார அமைச்சர் நாமல்
100 மில்லியன் பேர் பார்வையிட்ட மெனிகே மகே ஹித்தே பாடல் சாதனை
உலகளாவிய தரவரிசையில் முதல் 10 இல் இடம்பிடித்துள்ள சிங்கள பாடல்! 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரர்.. வைல்டு கார்டு என்ட்ரி நடிகர் அமித் பார்கவ் பற்றி இது தெரியுமா Cineulagam
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        