உலகப்புகழை ஈட்டியுள்ள யோஹானிக்கு வாழ்த்து கூறிய இளைஞர் விவகார அமைச்சர் நாமல்
பாடல் ஒன்றின் மூலம் உலகப் புகழை ஈட்டியுள்ள யோஹானி டி சில்வாவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றின் மூலம் அவர் இவ்வாறு வாழ்த்து கூறியுள்ளார்.
யுடியூப்பில் 100 மில்லியன் பேர் யோஹானியின் பாடலை பார்வையிட்டுள்ளனர்.
A massive congratulations to @yohanimusic on becoming the first Sri Lankan to pass the ‘100 MILLION views’ milestone on YouTube. A remarkable achievement and true inspiration for the youth of #lka to dream big and think global. #ManikeMageHithe #ජයගමු ?? pic.twitter.com/hPQ7owVPDv
— Namal Rajapaksa (@RajapaksaNamal) September 11, 2021
இலங்கையில் இதுவரையில் இவ்வாறு 100 மில்லியன் பேர் எந்தவொரு பாடலையும் பார்வையிட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பாடலின் வெற்றியானது இலங்கை வாழ் இளைஞர் யுவதிகள் பெரிய கனவுகளை காண்பதற்கும் அதனை மெய்ப்பிக்கவும் உந்து சக்தியாக அமையும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
100 மில்லியன் பேர் பார்வையிட்ட பாடலை பாடிய யோஹானிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri