ரணிலின் கனவு நிறைவேறியது! அரசியல் திருப்பம் - தேர்தல் முடிவு தொடர்பில் மகிந்த பகிரங்கம்
இலங்கையில் இன்றைய தினம் அரசியல் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட இடைக்கால ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகியிருக்கிறார்.
இது தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்கள் தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன. அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்!
2. நாம் அனைவரும் பிரிந்து செயல்படும் காலம் முடிந்து விட்டது, இனிமேல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
52 வாக்குகள் வித்தியாசத்தில் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க>>> இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் ஆற்றிய முதலாவது உரை! மகிந்த உட்பட பலருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு
3. அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களுக்கு இல்லாது போயுள்ள நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட அவர், வாக்கெடுப்பு முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அவையில் உரையாற்றும் போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் படிக்க>>> இலங்கை அரசியலில் ஏற்பட்ட திருப்பம்! தேர்தல் முடிவுக்குப் பின்னர் டலஸ் ஆற்றிய உரை (Video)
4. பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள காலி முகத்திடல் பகுதியில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் படிக்க>>> ஜனாதிபதியாக தெரிவான ரணில் - போராட்டக்களம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
5. இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு இந்தியா, இலங்கை அரசியல் தலைவர்களுக்கு அழுத்தங்களை கொடுத்ததாக வெளியாகியுள்ள ஊடக செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க>>> புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பிலான ஊடக செய்திகளை முற்றாக நிராகரிக்கும் இந்தியா
6. இலங்கையின் அடுத்த பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் படிக்க>>> ஜனாதிபதி பதவி ரணிலுக்கு! பிரதமர் யார்..
7. எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் வரும் சமயத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் படிக்க>>> எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்: மகிந்த
8. நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், பொதுவாக இதுதான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியமானதல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த முக்கியமான தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்றுத் தவறை மீன்டும் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க>>> கூட்டமைப்பின் தலைமைத்துவம் விட்டுள்ள மற்றுமொரு வரலாற்றுத் தவறு! ஜனாதிபதி சட்டத்தரணி ஆதங்கம்
9. இலங்கை, இரண்டரை கோடி மக்கள் வாழும் மிகச் சிறிய தீவாக இருந்தாலும், இலங்கையில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் மாற்றங்கள் சர்வதேசம் உற்றுநோக்கும் வகையில் அதிரடி மாற்றங்களாகவே இருக்கின்றன.
குறிப்பாக இலங்கை அரசியல் களத்தில் நொடிக்கு நொடி மாற்றங்களைக் காணும் ஒரு களமாக மாறிவிட்டிருக்கின்றது. அதிலும் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது.
மேலும் படிக்க>>> தனது அரசியல் வரலாற்றை மாற்றியமைத்தார் ரணில்! ஒரு ஆசனத்தைக் கொண்டு நடத்திய அரசியல் புரட்சி
10. ரூபாய்க்கு நிகரான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதி உள்ளடக்கிய இன்றைய நாணய மாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368.90 ரூபாயாகவும் கொள்விலை 358.53 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.