இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் ஆற்றிய முதலாவது உரை! மகிந்த உட்பட பலருக்கு விடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு
நாம் அனைவரும் பிரிந்து செயல்படும் காலம் முடிந்து விட்டது, இனிமேல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் என இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
52 வாக்குகள் வித்தியாசத்தில் இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தனது முதல் விசேட உரையினை ஆற்றியிருந்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பது என்னுடைய கடமை. பொருளாதார ரீதியாக இந்த நாடு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
| இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்! இறுதி நேரத்தில் மாறிய முடிவு |
அத்துடன் இதன்போது டலஸ் அழகப்பெரும, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச, சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியோரை ஒன்றிணைந்து செயற்பட ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்கால திட்டங்கள் தொடர்பில் நாளைய தினம் இவர்களுடன் சந்திப்பொன்று நடத்தப்படும். நாம் அனைவரும் பிரிந்து செயல்படும் காலம் முடிந்து விட்டது. இனிமேல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri
50 லட்ச ரூபாய் வேலையை விட்டுவிட்டு மோமோஸ் பிசினஸ் துவக்கிய நபர்: அவரது இன்றைய வருமானம் News Lankasri