ஜனாதிபதியாக தெரிவான ரணில் - போராட்டக்களம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
பண்டாரநாயக்க சிலை அமைந்துள்ள காலி முகத்திடல் பகுதியில் இருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் பிரவேசிக்கக் கூடாது என கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பொலிஸார், குறித்த சிலையை சேதப்படுத்தும் திட்டம் இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டக்களம்
இதனால் சிலை அமைந்துள்ள இடத்திலிருந்து 50 மீற்றர் பகுதிக்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைய முடியாதவாறு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.