எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்:மகிந்த
எந்த அரசாங்கம் ஆட்சியமைத்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கலந்துக்கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியில் வரும் சமயத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி: ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவானது குறித்து உங்களது கருத்து.
பதில்: அதிகளவான வாக்குகள் கிடைத்தது, அவர் ஜனாதிபதியாக தெரிவானார்.
கேள்வி: உங்களது நீண்டகால அரசியல் எதிராளியான ரணிலுக்கு நீங்களும் வாக்களித்திருக்கலாம்.
பதில்: இல்லை, அப்படியும் அல்ல
கேள்வி: எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைப்பது எப்படி நடக்கும்.
பதில்: நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். எந்த அரசாங்கமாக இருந்தாலும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். நாங்கள் கட்சியின் சார்பில் டலஸை நிறுத்தினோம். வாக்களித்தோம். தோல்வியடைந்தார். யாராவது வெற்றி பெற வேண்டுமே என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri