இலங்கையில் அழுத்தங்கள் இன்றி செயற்படுவதாக கூறும் பொலிஸார்
பாரபட்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கு இல்லாமல் சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு உகந்த சூழலில் இலங்கை பொலிஸார் தற்போது செயற்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தற்போதைய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த உத்தரவை அனைத்து அதிகாரிகளுக்கும் தாம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை சம்பவங்கள்
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே வீரசூரிய இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், முன்னைய தேர்தலுக்குப் பின்னரான காலகட்டங்களில் அடிக்கடி வன்முறைகள் இடம்பெற்றன. எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri