விவாதத்தின் நோக்கத்தை திசை திருப்பும் ஐக்கிய மக்கள் சக்தி : நலிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் விவாதத்திலிருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalintha Jayatissa) குற்றம் சுமத்தியுள்ளார்.
அறிக்கையொன்றிலேயே அவர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், “தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவே (Anura Kumara Dissanayake ) முதன்முதலாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) விவாதத்திற்கு அழைத்தார் என்பதை நான் நினைவூட்டுகின்றேன்.
பொருளாதாரக் கொள்கைகள்
2023ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அனுரகுமார திசாநாயக்க, சஜித்துடன் விவாதத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், வெளிப்படுத்தப்படாத சில காரணங்களுக்காக குறித்த விவாத சவாலை சஜித் பிரேமதாச நிராகரித்ததார்.
இந்நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான மாற்று விவாதத்தை தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபையுடன் முன்மொழிந்தனர்.
இந்தநிலையில், அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் விவாதத்தின் முக்கியத்துவத்தை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்." என குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாங்கங்களை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுங்கள்: கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வேண்டுகோள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |