முன்னாள் ஜனாதிபதிகளுக்கு டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள கோரிக்கை
தற்போது இலங்கையின் அரசியலில் ஈடுபட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேரும் தமது சொந்த நலனுக்காகவும், மக்களுக்காகவும் சில விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும(Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க(Chandrika Kumaratunga), மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) மற்றும் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆகியோர் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
அரசியலில் இருந்து விலகி இருப்பது அவர்களின் சொந்த ஆரோக்கியத்திற்கும், மக்களின் நலனுக்கும் நல்லது.
செலவிடப்படும் பொது நிதி
அவர்களுக்காக செலவிடப்படும் பொது நிதியை, அவர்கள் எந்த அரசியல் விடயத்திற்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் டளஸ் அழகப்பெரும கோரியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோன் குயின்சி அடம்ஸ், ஜனாதிபதி பதவிக்கு பின்னர் ஒரே ஒரு முறை அமெரிக்க காங்கிரஸில் போட்டியிட்டார்.
இந்தநிலையில் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அரசியலில் ஈடுபட்ட ஒரே வெளிநாட்டு தலைவர் அவர் மட்டுமே என்று அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam