வேலையை இழக்கும் அபாயத்தில் ஆயிரக்கணக்கான விமானப்படை வீரர்கள்
விமானப்படையில் சேவையாற்றும் 35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ (Udeni Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறைக்கப்பட்ட விமானப்படையினரின் எண்ணிக்கைக்கு பதிலாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த நம்புவதாகவும் விமானப்படை தளபதி கூறியுள்ளார்.
அக்குரகொட விமானப்படைத் தலைமையகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் விமானப்படைத் தளபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த விமானப்படை தளபதி,
விமானப்படையை குறைக்கும் பணி
நாங்கள் ஏற்கனவே விமானப்படையைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம், அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான சிறப்பு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளோம்.
தொழில்நுட்பம் அவ்வப்போது மாறுவதால், விலையும் குறைகிறது. சிசிடிவி நமக்கு புதிதல்ல. அத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், விமானப்படையை ஓரளவு குறைக்கும் திறன் நம்மிடம் உள்ளது.
உதாரணமாக, கிலோமீட்டருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கு அதிக எண்ணிக்கையிலான படையினரை நிறுத்த வேண்டும். ஆனால் உயர்தொழில்நுட்ப கமெரா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 13 மணி நேரம் முன்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam
