அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து நிதி இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

Sri Lankan rupee Colombo Kegalle Ranjith Siyambalapitiya Government Employee
By Mayuri Apr 10, 2024 11:57 AM GMT
Report

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு காரணமாக 13 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyamabalapitiya) தெரிவித்துள்ளார்.

இதன்படி, அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்திற்காக 107 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பணம் விடுவிப்பு

அண்மையில் கேகாலையில் (Kegalle) வைத்து நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyamabalapitiya) கருத்து தெரிவிக்கையில், அரச ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட 10,000 ரூபாவுடன், நிறுவனங்களுக்கு பணம் விடுவிக்கத் தயார் செய்யப்பட்டுள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.

இன்று வழங்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்

இன்று வழங்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து நிதி இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் | Government Staffs Sri Lanka Gov Employee Salary

சிங்கள தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு இலங்கையில் (Sri Lanka) அரச ஊழியர்களின் ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதியமைச்சு முன்னர் அறிவித்திருந்தது.

இந்த சம்பளத்தில் 2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட, அதிகரிக்கப்பட்டுள்ள அரச ஊழியர் கொடுப்பனவும் உள்ளடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, கூடுதலாக ஒவ்வொரு பணியாளருக்கும் அதிகரிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி

இதேவேளை தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்திருந்தார்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து நிதி இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் | Government Staffs Sri Lanka Gov Employee Salary

அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது.

அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்: ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

அதிகரிக்கப்படும் அரச ஊழியர்களின் சம்பளம்: ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை. இன்று போதியளவு எரிபொருள் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து நிதி இராஜாங்க அமைச்சு வெளியிட்டுள்ள தகவல் | Government Staffs Sri Lanka Gov Employee Salary

கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது. இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம்.

இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தெய்வமாக மாறிய சாரதி : தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள்

இலங்கையில் தெய்வமாக மாறிய சாரதி : தெய்வாதீனமாக உயிர் தப்பிய 50 பயணிகள்

வீடு வீடாக செல்ல தயாராகும் நாமல்

வீடு வீடாக செல்ல தயாராகும் நாமல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US